வைத்தியசாலையில் ரிஷாட் விடுத்த கோரிக்கை! நிராகரித்த அதிகாரிகள்

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பில் இருந்த நிலையில், கடந்த 17ம் திகதி திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ரிஷாட் பதியூதீன் இன்று அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணம் செலுத்தி சிகிச்சை பெறும் தேசிய வைத்தியசாலையின் அறைக்கு தன்னை மாற்றுமாறு ரிஷாட் பதியூதீன் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதனை நிராகரித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here