வைத்தியசாலையில் ரிஷாட்டின் மோசமான செயற்பாடு! கண்டுபிடித்த அதிகாரிகள்

0

சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின், வைத்தியசாலையில் செய்த இரகசிய செயற்பாடு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்த மருந்துகளை பருகாமல் அதனை தாள் ஒன்றில் சுற்றி கழிப்பறையில் வீசியதனை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரிஷாட் கழிப்பறையில் வீசிய மருந்துகளை கண்டுபிடித்த பொலிஸார் அதனை மருத்துவர்களிடம் காட்டிய போது அது ரிஷாட்டிற்காக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் என உறுதி செய்துள்ளனர்.

குற்ற விசாரரணை திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட ரிஷாட் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது வீட்டில் பணியாற்றிய சிறுமி உடலில் தீ வைத்துக் கொண்ட தினத்தன்றே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் தன்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here