வேலை நேரத்தில் சாப்பிட கூடாது…. ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிறுவனம்!

0

கொரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல இடங்களில் வேலை பறிப்பு , வேலை நேரத்தில் பணி செய்யாமல் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் பல நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தன.

ஊபர் நிறுவனம் தங்களது 3,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக தனது 3 நிமிட ஜூம் காலில் மீட்டிங்கில் தெரிவித்தது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களையும், வேலை நேரத்தில் உணவு அருந்தவும், டீ சாப்பிட செல்லும் ஊழியர்களை கண்டுபிடிக்கவும் புதுவகையான டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான தனது அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஊழியர் ஒருவர் சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அனைத்து ஊழியர்களும் வேலை நேரத்தில் சாப்பிட கூடாது.

வேலை நேரத்தில் சாப்பிடுபவர்களை பிடித்து கொடுத்தால் 20 டொலர் வழங்கப்படும்.

அதேசமயம், 3 முறைக்கு மேல் ஒருவர் மீது புகார் வந்தால் அந்த ஊழியர் உடனடியாக நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதுவகையான உத்தரவு மூலம் ஒரு சிலர் ஒவ்வொரு மாதமும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என சிலர் கூறியுள்ள அதேவேளை இனி டீ சாப்பிட செல்வதாக கூறி கட் அடிக்க முடியாது பலர் விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here