வேறு ஒரு ஆணுடன் ஓட்டம் பிடித்த மனைவிக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி

0

இந்தியாவில் குஜராத் மாநிலம் தக்கோத் மாவட்டத்திலுள்ள தன்பூர் தாலுகாவில் பழங்குடியின கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணுடன் சென்று வாழ்ந்துள்ளார்.

பின்னர் அவரது கணவரும் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து ஜூலை 6 ஆம் திகதி அந்த பெண்ணிற்கு வினோதமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த தண்டனையானது குறித்த பெண்ணின் ஆடைகளை நடுரோட்டில் வைத்து உருவி அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றள்ளனர்.

அதே நிலையில் அந்த பெண் தனது கணவரை தோளில் சுமந்து ஊரில் வலம் வரும்படி தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 18 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here