வேறுப்பட்ட டோஸ் பயன்படுத்துவதால் அபாயம்…! உலக சுகாதார அமைப்பு

0

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்து ஆபத்து ஏற்படுத்தும் என உலக சுகாதார நிலையத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாய்லாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தியதால் பயன்கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்துபோடுவதன் செயல்திறன் தாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

இதற்கான உறுதியான ஆதாரங்களோ தரவுகளோ இல்லை என சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here