வேட்டி சட்டையில் ரோபோட்… கவனத்தை ஈர்த்த “கூகுள் குட்டப்பா”

0

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.

அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் உதவியாளர்கள் சபரி சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர். படத்துக்கு கூகுள் குட்டப்பா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சூர்யா வெளியிட்டிருந்தார். அதில், கிராமத்து பெண் தோற்றத்தில் லாஸ்லியா மற்றும் வேட்டி சட்டை அணிந்த ரோபோட் என போஸ்டர் பட்டயகிளப்பியுள்ளது. வித்யாசமான இந்த போஸ்டர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here