வேட்டி அணிந்து நல்லூரானை வழிபட்ட சீன தூதுவர்!

0

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு சென்று இருந்தனர்

சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் ஆலயச் சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக காணப்பட்டது.

வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள சீனத் தூதுவர் நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here