வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

0

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இது B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு பரவல் வேகம் கொண்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக இந்த கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தவர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here