வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி மோதியதில் பெண் பலி!

0

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணும், அவரது தந்தையும் பேருந்துக்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த அவரது தந்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here