வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்

0

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பெப்ரவரி 11ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான போதிலும் ஒரு நாள் தொடரை நடத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

துணை கேப்டன் கே.எல்.ராகுல் இன்னும் இந்திய அணியில் சேரவில்லை.

மேலும் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார்.

அவர் பெப்ரவரி 6 ஆம் திகதி இந்தியாவின் பயோ-பப்பில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here