வெள்ளை மாளிகையில் இடம் பெற்ற 19 ஆவது திருமணம்…!

0
President Joe Biden's granddaughter Naomi Biden and her fiance, Peter Neal, are married on the South Lawn of the White House in Washington, Saturday, Nov. 19, 2022. (AP Photo/Carolyn Kaster)

அமெரிக்காவில் வாஷிங்டனில் வழக்கறிஞ்சராக பணியாற்றும் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடனுக்கு வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் திருமணம் இடம் பெற்றது.

இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர் ஆவார்.

28 வயதான நவோமி பைடனும் சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் இடம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும்.

அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும்.

மேலும் 1812-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை வெள்ளை மாளிகையில் வெறும் 19 திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளே நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here