வெள்ளத்தில் மிதக்கும் யாழ் நகரம்! 70 குடும்பங்கள் பாதிப்பு

0

யாழ். மாவட்டத்திற்குட்பட்ட சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கானை பிரதேச செயலர் பிரேமினி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 210 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

யாழில் மேலும், சில பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது

குறிப்பாக யாழ் நகரம் பகுதியில் வெள்ளநீர் தேங்கி வங்கிகள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்னாள் வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது.

இன்றைய தினம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக யாழ்மாவட்ட அரச அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை இவ்வாறு தொடர்ந்து பெய்யுமானால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களின் அன்றாட சேவைகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here