வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல பெருமளவானோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது.

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடிகள் இடம்பெறுகின்றது.

அவ்வாறு நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு கடவுச்சீட்டு அல்லது பணத்தை வழங்க முன்னர், அதனை பெற்றுக்கொள்ளும் நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என அதன் அனுமதிபத்திரத்தை சரிபார்த்து செயற்படுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here