வெளிநாட்டில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றும் இலங்கை வீரர்…?

0

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சூரஜ் ரந்திவ், அவுஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழல் பந்து வீரர் சூரஜ் ரந்திவ்(37), அவுஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான டிரன்ஸ்டெவ் என்ற பேருந்து நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

இதே போன்று, மற்றொரு இலங்கை முன்னாள் வீரரான சிந்தகா ஜெயசிங்கே என்ற மற்றொரு ஜிம்பாப்வே நாட்டின் வீரர் ஆகியோரும் டிரைவர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

சூரஜ் ரந்திவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளும், 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளும், 7 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சென்னை அணிக்காகவும், கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியமை குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here