வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகளால் ஆபத்து – எச்சரிக்கும் அதிகாரிகள்

0

கடுமையான கண்காணிப்பு பொறிமுறையின்றி, நாளாந்தம் பாரிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டால், கொவிட் -19 இன் ஆபத்து மேலும் தீவிரமடையும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளாந்தம் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருவதாக அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க உடனடியாக ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் இலங்கையில் மூன்று விமானங்கள் தரையிறங்கியதாகக் குறிப்பிட்ட அவர் , அதில் இந்தியப் பிரஜைகளை ஏற்றிச் சென்றனர், இலங்கையிலிருந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்கின்றனர் என்றார்.

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை வருமானம் ஈட்ட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த இதுபோன்ற சுற்றுலா குழுக்களை யார் வழிநடத்துகிறார்கள் என உபுல் ரோகண கேள்வி எழுப்பினார்.

சுகாதார பிரிவுகள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவம் தனிமைப்படுத்தல் அல்லது கண்காணிப்பு செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய சுற்றுலா குழுக்கள் நேரடியாக தங்கள் முகவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா சபை மூலம் இதனை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அத்தகைய சுற்றுலா குழுக்கள் எங்கு பயணம் செய்கிறார்கள், அவர்களின் பயணத் திட்டங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கை தெரியவில்லை, அது பாதுகாப்பற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவின் கொவிட் மாறுபாடு இதுபோன்ற சூழ்நிலைகளில் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது.

டெல்டா மாறுபாடு வெளிநாட்டு மூலத்தின் மூலம் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், உயிர் குமிழ்கள் மற்றும் பிற வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அவை கடுமையான முறையில் அமல்படுத்தப்படவில்லை என்றார்.

அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் மத்தியிலேயே டெல்டா கொரோனா
வைரஸும் நாட்டிற்குள் நுழைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here