வெளிநாட்டிற்கு செல்லவிரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

0

வெளிநாட்டிற்கு செல்லவிரும்பும் இலங்கையர்கள் தடுப்பூசியை பெற விரும்பினால் பொருத்தமான ஆவணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கவேணடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டிற்குள் நுழைபவர்கள் கட்டாயமாக இந்த தடுப்பூசியையே செலுத்தியிருக்கவேண்டும் என எந்த உலக நாடும் அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த எந்த தடுப்பூசியை செலுத்தினாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளன என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏதாவது நாடு தங்கள் நாட்டிற்குள் வருபவர்கள் குறிப்பிட்ட வகை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என விரும்பினால் சுகாதார அமைச்சு அந்த தடுப்பூசியை வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு செல்லவிரும்புபவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசியை பெற விரும்பினால் பொருத்தமான ஆவணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்சமர்ப்பிக்கவேணடும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லவுள்ளவர்கள் தங்கள் ஆவணத்தை என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here