மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

0
COLOMBO, SRI LANKA - FEBRUARY 19, 2014: Sri Lankan Airplane parked on apron in front of air traffic control tower at Bandaranaike International Airport. It is hub of Sri Lankan Airlines, the national carrier of Sri Lanka.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார் 20,000 பேர் பதிவு செய்துள்ளது.

அத்துடன், இவர்களில் முதல் கட்டமாக சுமார் 8,000 பேருக்கே பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ஏனையோருக்கும் பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதென வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here