வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

0

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும் மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மாணவர்கள் முழுமையான விபரங்களை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டியவர்கள் WWW.army.lk/covid19 என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பான திகதி உள்ளிட்ட விபரங்கள் குறுஞ் செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here