வெளிநாடு ஒன்றில் பல வருடங்கள் போராடி குடியுரிமை பெற்ற இலங்கை தமிழ் குடும்பம்

0

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடுகடத்தலுக்கு எதிராக நீண்ட சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்த பிரியா- நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர விசா வழங்குவதாக அந்த நாட்டு குடிவரவு அமைச்சர் அன்ருவ் கில்ஸ் அறிவித்துள்ளார்.

அனைத்து தெரிவுகளையும் பரிசீலித்ததன் அடிப்படையில், குடிவரவுச் சட்டம் 1958இன் பிரிவு 195யு இன் கீழ் தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தக் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ வழிசெய்யும் வகையில் நிரந்தர விசாக்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலோலாபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தது.

இந்த நிலையில், நிரந்தர விசா கிடைத்ததையிட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், 4 ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தை தம்மால் மறக்க முடியாது எனவும், தொழில்கட்சி அரசுக்கும், தமது போராட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் பிரியா நன்றி தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here