வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண் செய்த காரியம்! வெளியான அதிர்ச்சி தகவல்

0

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளான பஞ்சாப், கோவா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து சென்றவர்கள்.

அதேநேரம் இலங்கை, நேபாளம், பங்காளதேஷ் , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தியபோது, இந்த விஷயம் மனிதக் கடத்தல் தொடர்பானது என்பதை அதிகாரிகள் புரிந்து கொண்டதாக கான்பூர் காவல்துறை ஆணையாளர் ஆசிம் அருண் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில், பாதிக்கப்பட்ட கான்பூரைச் சேர்ந்த ஆறு பெண்கள், பஞ்சாப் மற்றும் சென்னையைச் சேர்ந்த இருவர், கோவா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தலா ஒரு பெண் ஆகியோர், இந்திய வெளியுறவு அமைச்சின் உதவியுடன் பாதுகாப்பாக நாடு திரும்பினர் என்று அந்த காவல்துறை அதிகாரி பிடிஐயிடம் கூறியுள்ளார்.

ஓமானில் வசிக்கும் இலங்கை வம்சாவளி பெண், வெளிநாடுகளின் முழு தொடர்புகளையும் கையாள்கின்றார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்தியாவின் முக்கிய முகவர்கள், பெண்களை, “சுற்றுலா விசாவில்” வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here