வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்! ஜனாதிபதி வெளியிட்ட உத்தரவு

0

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தமது பிசிஆர் முடிவுகள், கிடைக்கப்பெறும் வரையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சில விடுதிகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படும் மோசடி செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ரெபிட் பிசிஆர் பரிசோதனைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் வெளிநாட்டு பயணிகள் இவ்வாறு விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ​

தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என நாளாந்தம் சுமார் 2,000 பேர் கட்டுநாயக்க விமானத்தின் ஊடாக நாட்டுக்கு வருகைதருகின்றனர்.

இவ்வாறு வருகைதருபவர்கள் இலங்கையர்களாயினும், பூரண கொவிட் தடுப்பூசி பெற்றிருந்தாலும், கொவிட் பரிசோதனை மேற்கொண்டு, அதன் பெறுபேறு கிடைக்கும் வரையில் அருகிலுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனினும், 12 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை கிடைக்கப்பெறுவதாகவும், இத்தகைய குறுகிய காலத்துக்கு விடுதியில் தங்கியிருப்பதற்காக தம்மிடம் அதிகளவிலான பணம் வசூலிக்கப்படுவதாகவும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இந்த செய்தி வெளியாகிய நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். இந்த மோசடிகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here