வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்

0

இலங்கை பயணிக்கும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் புதிய வழிகாட்டல் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடைமுறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீண்டும் திருத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

அதனபடிப்படையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்து.

எனினும் அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கப்படுகின்றதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.

அத்துடன், முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here