வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களில் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, அவர்கள் தொடர்பில் முகாமைத்துவ நடவடிக்கை செய்ய நேரிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ்.எம் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here