வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 30ஆயிரம் இலங்கையர்கள்!

0

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நிர்க்கதியான மேலும் 20,000 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புவோரை தனிமைப்படுத்துவதற்கான, போதிய இடவசதிகள் இன்மை காரணமாக, அந்த செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக, சகல மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு விருந்தகமும், தங்குமிட விடுதியையும் அமைக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here