வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் போன்ற அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களை வந்தடையும் சகலருக்கு கொவிட்19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், அவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னரும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here