வெல்லவாய – தனமல்வில வீதியில் கோர விபத்து

0

இலங்கையில் வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வத்த பகுதியில் பயணித்த கெப் ரக வாகனத்தில் மோதி மான் ஒன்று உயிரிழந்துள்ளது.

திடீரென குறித்த மான் வீதியைக் கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த மான் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கெப் ரக வாகனத்தின் சாரதி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகல வைத்திய சேவை அலுவலகத்திற்கு சொந்தமான கெப் ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here