வெந்தயத்தில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா….?

0

வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவு குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வரலாம். இதனால் உடல் பலம் பெறும் வயிற்றுப் புண் குணமடையும்.

தலைமுடி உச்சந்தலை வெளிப்புற சீ தோஷங்களிலிருந்து காக்கிறது ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்ந்து ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிரத் தன்மையும் குறையும். ஒவ்வொரு சில பெண்களுக்கு மட்டும் மாதவிடாயின்போது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது. இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரையும் அருந்தி வர அந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here