வீதி விபத்துகள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்…!

0

இலங்கையில் வீதி விபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கும் வகையில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை (Mobile App) காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்(ஓய்வுநிலை) சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் இன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ‘ஈ – ட்ரெஃபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா’ (e-Traffic Police Sri Lanka) என்ற இந்த செயலியின் ஊடாக, பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here