வீட்டிற்குள் புகுந்த திருடனுக்கு நேர்ந்த கதி… அமெரிக்காவில் விசித்திர சம்பவம்..

0

அமெரிக்காவின் Maryland-ல் உள்ள Montgomery County-யில் இருக்கும் Silver Spring பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் திருட முயன்ற திருடன் வீட்டின் சுவருக்குள் மாட்டிக் கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை, அதிகாலை நேரத்தில் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ஏதோ ஒரு முனகல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அவர் உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளனர்.

பொலிசார் உடனடியாக அப்பகுதியை விரைந்து பின் வீட்டை சோதனை செய்த போது, வீட்டின் chimney(புகைபோக்கி) இருக்கும் இடத்தில் தான் சத்தம் வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த சுவரை உடைத்து பார்த்த போது, உள்ளே திருடன் ஒருவன் பயத்தில் அழுதபடி இருந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின், அந்த நபரை மீட்ட பொலிசார் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here