வீடொன்றின் மீது வாகனம் மோதி விபத்து…!

0

நோர்த் யோர்க்கில் வீடொன்றில் மீது வாகனம் மோதியுள்ளது.

அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

வெஸ்டன் வீதி மற்றும் ஸ்டார்விவ் வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு வாகனம் வீட்டுக்குள் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் ஒருவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் அந்த முயற்சி பயனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here