ஜப்பானின் மத்திய பகுதியில் பலத்த காற்று வீசியதில் 92 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
ஜப்பானின் மத்திய பகுதியில் ஷிஜுவோக்கா மாகாணத்தில் மகினோஹாரா நகரில் சூறாவளி போன்ற பலத்த காற்று நேற்று வீசியது.
இதில், கட்டிடத்தின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன. கார்கள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன.
இதனால் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.
எனினும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.
இதேபோன்று கடந்த சனிக்கிழமை மாலை பலத்த காற்று வீசியதில் கம்பங்கள் சாய்ந்தன. 3 பேர் லேசான காயமடைந்து உள்ளனர்.
3,200 வீடுகளுக்கு வேண்டிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.