விஸ்வாசம் படம் நடிகரின் சொந்த வாழ்க்கை கதையா?

0

அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித் நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல் போன்றும், இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்த உடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல ஆண்டுகள் பிரிந்து இருப்பது போன்றும், கிளைமாக்ஸில் இருவரும் இணைந்து இருப்பது போன்றும் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்த படத்தின் கதை இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த சகோதரரும், நடிகருமான பாலாவின் கதை என்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

’அன்பு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா. இவர் கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா-அமிர்தா தம்பதிகள் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இவர்கள் விவாகரத்து கோரி விண்ணப்பித்து விட்டு பிரிந்து வாழ்ந்ததாகவும், இதனை அடுத்து கடந்த 2019ஆண்டு இவர்களுக்கு கேரள நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தனது தம்பி பாலாவின் கதையை தான் இயக்குனர் சிவா, ’விஸ்வாசம்’ என்ற படமாக எடுத்துள்ளதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் சிவா ’இந்த நேரத்தில் ’விஸ்வாசம்’ படத்தின் இசைக்கு கிடைத்த விருது குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் எதிலும் நான் இல்லை என்பதால் அதில் என்ன வைரலாகி வருகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, என் தம்பியின் வாழ்க்கைக்கும் ’விஸ்வாசம்’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here