விஷேட சுற்றறிக்கையை வெளியிட்ட சுகாதார அமைச்சு!

0

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவசர நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல் கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைகின்ற நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here