விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

0

தமிழ் திரைப்பட காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக் அவர்கள் இன்று மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் நடிகர் விவேக் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இன்று காலை 11 மணிக்கு விவேக் அவர்கள் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு அவரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது

மேலும் அவருக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், மாரடைப்பு வந்ததற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here