விவேக்கின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

0

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து இப்போது அவரின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் ‘நடிகர் விவேக் மருத்துவமனைக்கு 11 மணிக்கு வந்த போது அவர் சுயநினைவில் இல்லை. அவரின் நாடித்துடிப்பும் இல்லை. உடனடியாக அவருக்கு ஆஞ்சீயோ கிராம் செய்யப்பட்டது. அவரின் இதயம் பலகீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here