விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விவசாய அமைச்சு

0

இலங்கையில் ஒரு ஏக்கருக்கும் குறைந்த பரப்பிலான வயல் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறைக் கொண்ட யூரியா பசளை விநியோகிக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தேவையான யூரியா பசளை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

சகல விவசாயிகளுக்கும் அவசியமான டி.எஸ்.பி பசளையை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சத்திடும் நிகழ்வு நேற்று விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

அந்த ஒப்பந்தத்திற்கு அமைய இந்த முறை பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட பசளை வழங்குவதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here