விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதிக்கும் நாடு

0

ஈரான் அரசு ‘கவர்ச்சியான’ விளம்பரம் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி, பெண்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை விதித்துள்ளது

ஈரானின் கலாசார அமைச்சகம், ஈரான் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம், நாட்டின் கடுமையான கற்பு விதிகளின் கீழ் இந்த தடையை அமுல்படுத்தியுள்ளது.

ஒரு “கவர்ச்சியான” காட்சி என்று அந்நாட்டில் சொல்லக்கூடிய ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில், இஸ்லாமிய பெண் ஒருவர் தனது ஹிஜாபை தளர்த்தி மேக்னம் ஐஸ்கிரீமைக் கடிப்பதைப் போன்று அமைந்திருந்து.

இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களை கோபப்படுத்தியுள்ளது.

அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விளம்பரம் “பொது மரியாதைக்கு எதிரானது” என்றும், “பெண்களின் மதிப்புகளை” அவமதிப்பதாகவும் அதிகாரிகள் தீர்ப்பளித்தனர்.

ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தில், “ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின்” படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரானின் விதிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களையும் “இசைக் கருவிகளை பயன்படுத்துவதை” தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here