விலங்குகள் மீதான ஆராய்ச்சி தொடர்பில் வெளியாகிய தகவல்..!

0

சுவிட்சர்லாந்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முழுமையான தடையை பொதுமக்கள் தெளிவாக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கும் வாக்கெடுப்பில் சுவிஸ் பொதுமக்கள் நான்காவது முறையாக நிராகரித்துள்ளனர்.

பொதுவாக எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 556,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகள் பயன்பாடானது 18% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில், பெரும்பாலான விலங்கு பரிசோதனைகள் வணிக அடிப்படையிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டில், இந்த நடைமுறைகளில் 60% க்கும் அதிகமானவை அடிப்படை உயிரியல் ஆராய்ச்சியின் போது முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்துள்ளது.

தற்போது நடந்த வாக்கெடுப்பில் தடை விதிப்புக்கு ஆதரவாக 20.9% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தடை ஏதும் தேவை இல்லை என 79.1% மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதனிடையே புதிய மருந்துகளை உருவாக்க விலங்குகள் மீதான ஆராய்ச்சி தேவை என்று மருந்து தயாரிப்பு தொழில்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here