விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல்… இருவர் பலி

0

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விருந்து நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் அங்கு வந்த சிலர் விருந்து நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

எதிர் பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள், பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக துப்பாக்கியை வீசி விட்டு தப்பி விட்டனர்

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து 4 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here