விருந்தகக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து….17 பேர் பலி!

0

கிழக்கு சீனாவின் சியூஸோ (Suzhou) நகரில் உள்ள விருந்தகக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த விருந்தகக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததன் பின்னர், சுமார் 36 மணிநேரம் மேற்கொண்ட மீட்புப் பணிகளில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தில், அண்மையில் மேலும் சில மாடிகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜியாங்சு (Jiangsu) மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here