விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பித்த ரஜினி

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று காலை திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் தனக்கு விருது அளித்த மத்திய அரசுக்கும் தன்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி கூறி ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியத்‌ திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப்‌ பால்கே விருது எனக்கு வழங்கியதற்கும்‌ , மதிப்பிற்குரிய பாரத பிரதமர்‌ திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும்‌ என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
என்னில்‌ இருந்த நடிப்புத்‌ திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன்‌ ராஜ்‌ பகதூருக்கும்‌ , வறுமையில்‌ வாடும்‌ போதும்‌ என்னை நடிகனாக்க பல தியாகங்கள்‌ செய்த என்‌ அண்ணன்‌ திரு சத்யநாராயணா கெய்க்வாட்‌ அவர்களுக்கும்‌, என்னை திரையில் அறிமுகம்‌ செய்து.

இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர்‌ திரு பாலச்சந்தர்‌ அவர்களுக்கும்‌, திரையுலக. தயாரிப்பாளர்கள்‌, இயக்குனர்கள்‌ தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள்‌, ஊடகங்கள்‌, மற்றும்‌ என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ்‌ மக்களுக்கும்‌, உலகெங்கிலும்‌ உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும்‌ இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்‌.

என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர்‌ திரு எடப்பப்படி பழனிச்சாமி அவர்களுக்கும்‌, மதப்பிற்குரிய துணை முதலமைச்சர்‌ திரு. ஓ. பன்னீர்‌ செல்வம்‌ அவர்களுக்கும்‌, மதப்பிற்குரிய எதிர்‌க்கட்சி தலைவர்‌ நண்பர்‌ திரு. மு. ௧. ஸ்டாலின்‌ அவர்களுக்கும், நண்பர்‌ கமல்‌ ஹாசன்‌ அவர்களுக்கும்‌, மத்திய மாநில அரசியல்‌ தலைவர்களுக்கும்‌, நண்பர்களுக்கும்‌ திரையுலக நண்பர்களுக்கும்‌ என்னுடைய நலம்‌ விரும்பிகளுக்கும்‌ என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்‌ நாடு! ஜெய்ஹிந்த்‌!

இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here