வியாபார நிலையத்தின் கூரைக்குள் பதுங்கியிருந்த திருடனால் பரபரப்பு!

0

பிரான்ஸின் Cogolin (Var) நகரில் உள்ள E.Leclerc வியாபார நிலையத்தில் திருடன் ஒருவன் கூரை ஒன்றுக்குள் பதுங்கி இருந்துள்ளான்.

கடந்த சனிக்கிழமை மாலை இந்த அங்காடிக்குள் நுழைந்த திருடன் ஒருவன், வியாபார நிலையத்தின் கழிவறைக்குச் சென்று, அதன் உட்பக்க கூரைக்குள் ஏறி பதுங்கியுள்ளான்.

நீண்ட மணித்தியாலங்களுக்கு பின் E.Leclerc மூடும் நேரம் வரை காத்திருந்துள்ளான்.

பின்னர் அங்காடி மூடப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டதும் திருடன், கூரையில் இருந்து இறங்கி, கழிவறையை விட்டு வெளியேறினான்.

E.Leclercயின் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதிக்குச் சென்ற அவன், அங்கிருந்து தனக்கு தேவையான பொருட்களை திருடிக்கொண்டு வெளியேற முற்பட்ட போது துரதிஷ்ட்டவசமாக அங்காடியின் காவலாளியிடம் சிக்கிக்கொண்டுள்ளான்.

காவலாளி திருடனை பார்த்துவிட்டு, E.Leclercயில் இருந்து அவனை வெளியேற விடாமல் பூட்டி வைத்து விட்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிஸார் திருடனை கைது செய்து , விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here