வியட்நாமில் வைரஸை பரப்பிய நபருக்கு சிறை தண்டனை!

0

வியட்நாம் கொரோனா வைரஸை கட்டுக்குக்குள் கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளது.

வெகுஜன சோதனை, தொடர்பு தடமறிதல், இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் என அனைத்தையும் வியட்நாம் அரசு தீவிரமாக செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 32 வயதான டாவோ துய் துங் (Dao Duy Tung) எனும் இளைஞருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு.

அவர், ஆபத்தான தொற்று நோய்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹாய் டுவோங் (Hai Duong) மாகாண மக்கள் நீதிமன்றத்தில் ஒரு நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடுமையான கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக, மற்றவர்களுக்கு வைரஸ் பரப்பியதற்காக மற்றும் அதிகாரிகளுக்கு நிதி சேதத்தை ஏற்படுத்தியதற்காக டாவோ துய் துங்கிற்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாவோ துய் துங் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி லாவோல் (Laos) நாட்டிலிருந்து வியட்நாம் வந்துள்ளார்.

அவர் அந்நாட்டு விதிமுறைகளின்படி சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

லாவோஸ் நாட்டில் அவருடன் சமீபத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதியான போதும், டாவோ சோதனை செய்து கொள்ளவில்லை.

இவருக்கு தொற்று இருந்துள்ள நிலையில் டாவோவால் பலருக்கு தொற்று பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here