விமானம் விழுந்து கோர விபத்து! 9 பேருக்கு நேர்ந்த கதி!

0

டொமினிகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கிய போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா மக்களை தனது இசை மூலம் கவர்ந்து இழுத்தவர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்.

இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர் கூட்டங்கள் உள்ளது.

இந்நிலையில் இவர், அவரது மனைவி, மகன் உட்பட பட மொத்தம் 9 பேர் Isabella விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள Florida மாகாணத்துக்கு சொகுசு விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானிகள், விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென தீப்பற்றி விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here