அமெரிக்காவின் Florida மாகாணத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தில் சுமார் 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர்.
அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்துள்ளார்.
விமான பணிப்பெண்கள் அவரை மாஸ்க் அணியும்படி கூறினார்கள்.
இது தொடர்பாக ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சக பயணிகள் எடுத்துக் கூறியும் அவர் மாஸ்க் அணிய மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி விமானம் புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து மியாமி விமான நிலையத்துக்கே விமானம் திரும்பி வந்து தரையிறங்கியது.
இதையடுத்து தகவலின்பேரில் பொலிஸ் மாஸ்க் அணிய மறுத்த நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.