விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியன்!

0

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் சில ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்கு புறம்பான மக்களை குழப்பும் திசை திருப்பும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜாவிற்கும், இரா.சாணக்கியனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும், இதன்காரணமாக சாணக்கியன் மீது மாவை கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையிலேயே சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கமும் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here