விபத்தில் சிக்கிய சுமந்திரனின் வாகனம்!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.45 அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் தமக்கோ வாகனத்தில் பயணித்த ஏனையோருக்கோ எந்த பாதிப்பும் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வேறொரு வாகனத்தின் மூலம் அவர் பயணத்தை தொடர்ந்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here