விபத்தின் போது வீதியின் நடுவே நின்றிருந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது!

0

பதுளை மாவட்டம் பசறை பகுதியில் நேற்றைய தினம் 14 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்தின் போது வீதியின் நடுவே நின்றிருந்த டிப்பர் ரக வானத்தின் சாரதி தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை – கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து லுணுகலை- பதுளை வீதியில், பசறை 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு கவிழ்ந்ததில் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது விபத்துக்குள்ளான பேருந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த நிலையில் நடு வீதியில் நின்றிருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றிருந்தார்.

அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவ்லதுறையினர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here