விபச்சார விடுதியில் 13 வயது சிறுவன்…. சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பு

0

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 வயதான சிறுவன் விபச்சார விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளான்.

குறித்த விடுதியில் 23 வயதான ருமேனியா நாட்டவரான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த அந்த சிறுவன், தமது வயதை 18 என கூறியுள்ளான்.

சம்பவத்திற்கு பின்னர், விபச்சார விடுதியில் இருந்து வெளியே வந்த சிறுவனை, அப்பகுதி வழியாக கடந்து சென்ற ரோந்து பொலிசார் விசாரிக்கவும், சிறுவனின் உண்மையான வயது வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பொலிசார் வழக்குப் பதிந்து, பாலியல் தொழிலாளியான 23 வயது ருமேனியா நாட்டவருக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்தில் கோரினர்.

இந்த வழக்கில் தற்போது 23 வயதான அந்த பாலியல் தொழிலாளிக்கு 90 பிராங்குகள் வீதம் 90 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுகள் நன்னடத்தை காலமாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தங்களை நாடும் நபரின் வயது தொடர்பில் சந்தேகம் எழுந்தால், அந்த கோரிக்கையை நிராகரிக்கவும் நீதிமன்றம் குறித்த பாலியல் தொழிலாளிக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

சிறுவன் தமக்கு 18 வயது எனவும், பார்வையில் இளைஞராக இருந்ததால் மட்டுமே தாம் அனுமதித்ததாக நீதிமன்றத்தில் அந்த பாலியல் தொழிலாளி கூறியுள்ளார்.

பொதுவாக வயதை உறுதி செய்ய அடையாள அட்டையை பரிசோதிப்பார்கள். ஆனால் இந்த விடயத்தில் அடையாள அட்டை பரிசோதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here