வித்தியாசமான பார்ட்டியில் விபத்துக்குள்ளான விமானம்…! இருவர் பலி

0

மெக்ஸிக்கோவில் கேன்கன் நகரித்தில் விமானம் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பலியாகியுள்ளனர்.

பெற்றோர் கருவிலிருக்கும் தங்கள் பெண் குழந்தையின் பாலினத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெளிப்படுத்த பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

வித்தியாசமாக குழந்தையின் பாலினத்தை அந்தரத்திலிருந்து பேனர் மூலம் காண்பிக்க சிறிய ரக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

பார்ட்டியின் போது வானத்தில் விமானம் சாகசம் செய்துக் கொண்டிருக்க பார்ட்டியில் கலந்துக்கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அதை வீடியோ எடுத்தபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலுக்கு விழுந்து விபத்துக்குள்ளானது

இரண்டு விமானகளும் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும்.

அதில் ஒருவர் மீட்பு பணியின் போது இறந்துவிட்டதாகவும், மற்றொரு விமானியை உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவரும் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பெடரல் சிவில் ஏஜென்சி இப்போது விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here